மளிகை கடைகளில் பணம் திருட்டு


மளிகை கடைகளில் பணம் திருட்டு
x

மளிகை கடைகளில் பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தெற்கு ராஜா வீதி அருகே தட்சிணாமூர்த்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. இதில் சிராஜூதீன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கடையில் இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் 1½ பவுன் சங்கிலி ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிராஜூதீன் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் புதுக்கோட்டை நகரப்பகுதியில் சசிக்குமார் என்பவரது மளிகை கடையிலும் ரூ.20 ஆயிரம் திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாகவும் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story