உளுந்தூர்பேட்டை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


உளுந்தூர்பேட்டை அருகே    2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு    மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Nov 2022 6:45 PM GMT (Updated: 25 Nov 2022 6:45 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே 2 மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை சேலம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது 22). இவர் தனக்கு சொந்தமான ரூ.2 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை தனது வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை.

அதனை மர்மநபர் யாரோ? நள்ளிரவில் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதேபோல் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த வடக்கு குரும்பூர் கிராமத்தை சேர்ந்த முருகன் (45) என்பவருக்கு சொந்தமான ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளையும் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த தனித்தனி புகார்களின்பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, மோட்டார் சைக்கிள்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக உளுந்தூர்பேட்டை பகுதியில் அடுத்தடுத்து இருசக்கர வாகனங்கள் திருடு போவது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story