ரூ.1 லட்சம், 8 பவுன் நகை திருட்டு; பெண் கைது


ரூ.1 லட்சம், 8 பவுன் நகை திருட்டு; பெண் கைது
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே அடுத்தடுத்த வீடுகளில் ரூ.1 லட்சம், 8 பவுன் நகை திருடிய வழக்கில், பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி அருகே அடுத்தடுத்த வீடுகளில் ரூ.1 லட்சம், 8 பவுன் நகை திருடிய வழக்கில், பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் நாச்சிமுத்து, என்ஜினீயர். இவரது மகன், ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இதற்காக ஊட்டிக்கு குடும்பத்துடன் வந்த நாச்சிமுத்து, பர்ன்ஹில் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தார்.

மேலும் அந்த வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று நாச்சிமுத்து, வீட்டில் வைத்திருந்த நகைகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்று சோதனை செய்தார்.

அப்போது 8 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

பெண் கைது

இதில், நாச்சிமுத்து தங்கி உள்ள வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டிலும் ரூ.1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வீடுகளில் ஆள் இல்லாத நேரங்களில் மர்ம நபர் புகுந்து பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மணிக்குமார் தலைமையிலான போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே வீடுகளில் இருந்த கதவு மற்றும் பீரோவில் இருந்த பூட்டு உடைக்கப்படாமல் பணம் மற்றும் நகைகள் திருடு போயிருந்ததால், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் அல்லது இவர்களுக்கு தெரிந்தவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

விசாரணையின் முடிவில் பக்கத்து வீட்டை சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மனைவி ஷாலினி (வயது 33) திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் திருட்டு நகைகளை வாங்கியதாக நகைக்கடை உரிமையாளர் ஒருவரை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டியில் அடுத்தடுத்த வீடுகளில், நடந்த திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

1 More update

Next Story