உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு
உரக்கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு போனது
திருச்சி
திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே உரம் மற்றும் விதைகள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் வழக்கம் போல நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு இருந்த ரூ.1 லட்சம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story