தஞ்சை பூமாலை வணிக வளாகத்தில் ரூ.1 லட்சம் திருட்டு


தஞ்சை பூமாலை வணிக வளாகத்தில் ரூ.1 லட்சம் திருட்டு
x

தஞ்சை பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

தஞ்சை பூமாலை வணிக வளாகத்தில் உள்ள கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பூமாலை வணிக வளாகம்

தஞ்சை ரெயிலடியில் கைவினைக்கலைஞர்களின் பொருட்களை விற்பனை செய்வதற்கான பூமாலை வணிக வளாகம் உள்ளது. இங்கு பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. தினமும் காலையில் கடைகள் திறக்கப்பட்டு இரவு வரை விற்பனை நடைபெறும். கடையை நடத்தி வருபவர்கள் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

இங்கு தஞ்சையை அடுத்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சாந்தி என்பவரும் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை கடையை திறப்பதற்காக வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பணம் திருட்டு

பின்னர் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு கல்லாவில் இருந்த ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்தை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது. இது குறித்து சாந்தி தஞ்சை கிழக்குப்போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவுசெய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story