மருந்து கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு


மருந்து கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு
x

கோவையில் மருந்து கடையில் ரூ.30 ஆயிரம் திருட்டு போனது.

கோயம்புத்தூர்


கோவை சவுரிபாளையம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் சகாயராஜ் (வயது 48). இவர் மசக்களிபாளையம் லட்சுமிபுரத்தில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர் 23-ந் தேதி இரவு வழக்கம் போல் மருந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அன்று நள்ளிரவில் இவரது கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கு இருந்த ரூ.30 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.

பின்னர் நேற்று முன்தினம் காலை மருந்து கடையை திறக்க சகாயராஜ் வந்தார். அப்போது கடை ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கடை உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story