வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு

வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 ஆயிரம் திருட்டு
x

வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் ரூ.5 ஆயிரம் மற்றும் கண்காணிப்பு கேமராவை திருடிச்சென்றுள்ளனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் ரூ.5 ஆயிரம் மற்றும் கண்காணிப்பு கேமராவை திருடிச்சென்றுள்ளனர்.

வந்தவாசியை அடுத்த மும்முனி புறவழிச் சாலை பகுதியில் அருகருகே 3 டாஸ்மாக் மதுக் கடைகள் உள்ளன. ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவு மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடினர்.

மேலும் தங்களை அடையாளம் காண முடியாமல் இருக்க செய்வதற்காக கடையினுள் பொருத்தப்பட்டிருந்த இரு கண்காணிப்பு கேமராக்களை திருடியுள்ளனர்.

அதன் பின்னர் மர்மநபர்கள் மற்ற இரு கடைகளின் பூட்டுகளை உடைக்க முயன்றுள்ளனர். அது முடியாமல் போனதால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து தகவலறிந்த பொன்னூர் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தடயவியல் நிபுணர் சுந்தர்ராஜன் சம்பவ இடம் சென்று கைரேகை பரிசோதனை மேற்கொண்டார். இது குறித்து வந்தவாசி பொன்னூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்/

Next Story