ஓட்டலில் ரூ.7 ஆயிரம் திருட்டு


ஓட்டலில் ரூ.7 ஆயிரம் திருட்டு
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முட்டைக்காட்டில் ஓட்டலில் ரூ.7 ஆயிரம் திருட்டு

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை அருகே உள்ள வழிக்கலம்பாடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது52). இவர் முட்டைக்காட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வியாபாரம் முடிந்த பின்பு வழக்கம்போல் ஓட்டலை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் அதிகாலையில் ஓட்டலை திறந்து உள்ளே சென்ற போது பின்பக்க கிரில் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மேஜையை பார்த்த போது அதில் வைத்திருந்த ரூ.7 ஆயிரத்தை காணவில்ைல. இரவில் யாரோ மர்ம நபர்கள் பின்பக்க கிரில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்து கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டலில் பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story