பெயிண்ட் கடையில் ரூ.8 லட்சம் திருட்டு


பெயிண்ட் கடையில் ரூ.8 லட்சம் திருட்டு
x

பெயிண்ட் கடையில் ரூ.8 லட்சம் திருட்டப்பட்டுள்ளத.

கரூர்

கரூர் தாந்தோணிமலையில் ஒரு பெயிண்ட் கடை உள்ளது. இக்கடையில் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து நேற்றுமுன்தினம் இரவு கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லா பெட்டியில் இருந்த சுமார் ரூ.8 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு தொடர்பாக தாந்தோணிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story