ரூ.1½ லட்சம் தேங்காய் எண்ணெய் திருட்டு


ரூ.1½ லட்சம் தேங்காய் எண்ணெய் திருட்டு
x

தியாகதுருகம் அருகே ரூ.1½ லட்சம் தேங்காய் எண்ணெய் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தேவியாகுறிச்சியை சேர்ந்தவர் ரவி (வயது 49) டிரைவர்.. இவர் புதுச்சேரியில் இருந்து சுமார் 450 பெட்டி தேங்காய் எண்ணெயை லாரியில் ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம் அருகே மாடூர் டோல்கேட் அருகில் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது லாரியில் இருந்த தேங்காய் எண்ணெய் பெட்டிகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிசென்றது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story