கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு
கண்காணிப்பு கேமராக்கள் திருட்டு போனது.
திருச்சி
உப்பிலியபுரம் ஒன்றியம் கோட்டப்பாளயம் ஊராட்சி சார்பில் ஊரின் மையப்பகுதியில் 3 சாலைகளை இணைக்கும் பகுதியில் கண்காணிப்பு மேகராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நள்ளிரவில் யாரோ மர்ம ஆசாமிகள் 3 கேமராக்களை திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், ஜார்ஜ்துரை ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 20 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அந்த நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story