கோவில் உண்டியல் திருட்டு


கோவில் உண்டியல் திருட்டு
x

கோவில் உண்டியல் திருட்டு போனது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பிச்சனூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அக்னி வீரனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் விளக்கு போடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை கோவிலுக்கு விளக்கு போடச்சென்ற இளமாறன் என்பவர் பார்த்தபோது, கோவிலில் இருந்த உண்டியல் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ஊர் மக்களிடம் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து ஊர் மக்கள் சார்பாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த உண்டியலில் சுமார் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பணம் இருந்திருக்கலாம் என்று பக்தர்களால் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார், உண்டியலை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story