தேனி கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு குழு ஆலோசனை கூட்டம்


தேனி கலெக்டர் அலுவலகத்தில்  போதைப்பொருள் தடுப்பு குழு ஆலோசனை கூட்டம்
x

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தேனி மாவட்ட அளவிலான போதைப் பொருள் தடுப்பு குழுவினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தேனி மாவட்ட அளவிலான போதைப் பொருள் தடுப்பு குழுவினருக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும்போது, "மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகாமையில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என கண்காணிக்க வேண்டும். போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story