தேனி மாவட்ட வன அலுவலர் பணி இடமாற்றம்


தேனி மாவட்ட வன அலுவலர் பணி இடமாற்றம்
x

தேனி மாவட்ட வன அலுவலர் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்

தேனி

தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டார். அதன்படி தேனி மாவட்ட வன அலுவலர் வித்யா முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சமர்தா, தேனி மாவட்ட வன அலுவலராக நியமிக்கப்பட்டார். அதுபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வைகை அணை தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லூரி முதல்வர் ராஜ்மோகன், சென்னை ஈர நிலங்கள் பிரிவு துணை வனப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story