தேனி, எரசக்கநாயக்கனூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்


தேனி, எரசக்கநாயக்கனூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனி, எரசக்கநாயக்கனூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தேனி

தேனி அருகே உள்ள வடவீரநாயக்கன்பட்டி, சின்னஓவுலாபுரம் துணை மின் நிலையங்களில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, வடவீரநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தேனி கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதிய பஸ் நிலையம், தொழிற்பேட்டை, சிவாஜி நகர், அரப்படித்தேவன்பட்டி, வடபுதுப்பட்டி, பாரஸ்ட்ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

சின்னஓவுலாபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திராகாலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரியகுளம் மின் கோட்ட பராமரிப்பில் உள்ள ஆண்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி, ஆண்டிப்பட்டி, டி.சுப்புலாபுரம், ராஜகோபாலன்பட்டி, டி.பொம்மிநாயக்கன்பட்டி, ஏத்தக்கோவில், ராஜதானி, பாலக்கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story