தேனி தீயணைப்பு நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறை கூடுதல் பணியிடம் உருவாக்கப்படுமா?


தேனி தீயணைப்பு நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறை  கூடுதல் பணியிடம் உருவாக்கப்படுமா?
x

தேனி தீயணைப்பு நிலையத்தில் ஆட்கள் பற்றாக்குறையால் தீயணைப்பு வீரர்கள் பணிச்சுமையால் பரிதவிக்கின்றனர். எனவே, கூடுதல் பணியிடம் உருவாக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேனி


தேனி மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. மதுரையில் இருந்து தேனி மாவட்டம் பிரிக்கப்படும் முன்பு தேனி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் உள்பட 11 பேருக்கான பணியிடம் ஒதுக்கப்பட்டது. அதன்பிறகு தேனி நகர் பல்வேறு வளர்ச்சியை சந்தித்துள்ளது. குடியிருப்புகள் பல மடங்கு பெருகி உள்ளன. தேனி மட்டுமின்றி தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, பூதிப்புரம், பேரூராட்சி பகுதிகளிலும், அரண்மனைப்புதூர், கொடுவிலார்பட்டி, வடபுதுப்பட்டி, ஊஞ்சாம்பட்டி ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளிலும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் பெருகி உள்ளன.

தேனி தீயணைப்பு நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொழிற்சாலைகளும் அதிக அளவில் உள்ளன. ஆனாலும் தேனியில் தீயணைப்பு படைவீரர்கள் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை. இதனால் தீயணைப்பு படை வீரர்கள் பணிச்சுமையால் பரிதவித்து வருகின்றனர்.

எனவே தேனி நகரின் நலன் கருதி தீயணைப்பு நிலையத்தில் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கவும், கூடுதல் வீரர்களை நியமிக்கவும் அரசு முன்வர வேண்டும் என்பது தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story