தெப்ப உற்சவ திருவிழா
குற்றாலம் கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா நடந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தெப்ப உற்சவ திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. குற்றாலம் சித்திர சபை முன்பு உள்ள தெப்பக்குளத்தில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பம் தயார் நிலையில் இருந்தது. அதில் மாலை 6-50 மணிக்கு குற்றாலநாத சுவாமி, குழல் வாய்மொழி அம்மை ஏற்றப்பட்டு மேள தாளங்களுடன் தெப்ப குளத்தில் வலம் வர தொடங்கியது. மொத்தம் 11 சுற்றுகள் வலம் வந்து இரவு 8 மணிக்கு முடிவடைந்தது. இந்த விழாவில் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story