இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா தொடக்கம் 7-ந் தேதி தேர்பவனி நடக்கிறது
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 7-ந் தேதி தேர்பவனி நடக்கிறது.
மானாமதுரை
இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 7-ந் தேதி தேர்பவனி நடக்கிறது.
திருவிழா தொடக்கம்
மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் உலக புகழ்பெற்ற திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருவிழா தொடக்கமாக பங்கு இறைமக்கள் திரு இருதய ஆண்டவர் உருவம் தாங்கிய கொடியை ஊர்வலமாக ஆலயத்துக்கு கொண்டு வந்து ஆலயத்தின் அருட்பணியாளர் இமானுவேல்தாசன் உள்ளிட்ட அருட்பணியாளர்களிடம் வழங்கினர். அதைத்தொடர்ந்து மதுரை ஞானஒளிபுரம் பங்குத்தந்தை ஜேம்ஸ் தலைமையில் மாலை 6.30 மணிக்கு ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
சிவகங்கை வியானி நிலைய இயக்குனர் அருள்தந்தை அமலன், எட்வர்ட், கேரளாவை சேர்ந்த அருட்பணியாளர் ஜெரோம், சவேரியார்பட்டினம் பங்குந்தந்தை புஷ்பராஜ் கொடியேற்ற, திரு இருதய ஆண்டவர் ஆலய அருட்பணியாளர் இமானுவேல்தாசன் உள்ளிட்டோர் கொடியேற்ற திருப்பலி நிறைவேற்றினர்.
தேர்பவனி
இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், பங்கு இறைமக்கள் உள்ளிட்டோர் கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வருகிற 8-ந் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவின்போது தினமும் பல்வேறு பங்கு இறை மக்கள் சார்பில் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் வெவ்வேறு தலைப்புகளில் திருப்பலி நிறைவேற்றப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 7-ந் தேதி இரவு திரு இருதய ஆண்டவர் சொரூபம் தாங்கிய மின்விளக்கு ரத பவனி நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை சிவகங்கை மறை மாவட்ட (பொறுப்பு) ஆயர் ஸ்டீபன் அந்தோணி திருவிழா திருப்பலியும், மாலையில் முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம் திருவிழா நிறைவு திருப்பலியும் நிறைவேற்றுகின்றனர்.
8-ந் தேதி நற்கருணை விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய அருட்பணியாளர் அ.இமானுவேல்தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கத்தினர், பங்கு இறை மக்கள், மரியின் ஊழியர் சபை சகோதரிகள் செய்துள்ளனர்.