சமூகவலைதளத்தில் வாளுடன் புகைப்படம் பதிவிட்ட 3 வாலிபர்கள் ைகது


சமூகவலைதளத்தில் வாளுடன் புகைப்படம் பதிவிட்ட 3 வாலிபர்கள் ைகது
x

களக்காடு அருகே சமூகவலைதளத்தில் வாளுடன் புகைப்படம் பதிவிட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே சமூகவலைதளத்தில் வாளுடன் புகைப்படம் பதிவிட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வாளுடன் புைகப்படம்

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வாலிபர்கள் தங்களது கைகளில் வாளுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டனர். இந்த காட்சி வைரலாக பரவியது.

மேலும், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வாசகங்களையும் பதிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

3 வாலிபர்கள் கைது

இந்த நிலையில் அந்த 3 வாலிபர்களும் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதாவது களக்காடு அருகே உள்ள பத்மநேரியை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் வானமாமலை (வயது 27), மற்ற 2 பேரும் 18 வயது நிரம்பிய வாலிபர்கள் என்பது ெதரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேசமணிகண்டன், ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து வானமாமலை உள்பட 3 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி ஜாமீனில் விடுவித்தனர்.

இந்த சம்பவம் களக்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story