கொள்ளிடம் பகுதியில் மண்பானை விற்பனை மும்முரம்


கொள்ளிடம் பகுதியில் மண்பானை விற்பனை மும்முரம்
x

பொங்கல் பண்டிகையையொட்டி கொள்ளிடம் பகுதியில் மண்பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

பொங்கல் பண்டிகையையொட்டி கொள்ளிடம் பகுதியில் மண்பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

மண்பானை விற்பனை மும்முரம்

பொங்கல் பண்டிகையையொட்டி கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், திருமயிலாடி, மாதிரவேளூர், வேட்டங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்டங்கள் தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மண்பாண்டங்களை விரும்பி பயன்படுத்துபவர்கள் ஆண்டு தோறும் மண்பாண்டங்கள் தயாரிக்கும் இடங்களுக்கே நேரில் வந்து வாங்கி செல்கின்றனர். கொள்ளிடம் மற்றும் புதுப்பட்டினம், புத்தூர் ஆகிய கடைவீதிகளில் மண்பானைகளை விற்பனைக்காக வைத்துள்ளனர். கொள்ளிடம் பகுதியில் மண்பானை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

எண்ணிக்கை குறைந்துள்ளது

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில்,

சாதாரணமாக அவ்வப்போது குறைந்த எண்ணிக்கையில் மண்பாண்டங்கள் தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். கடந்த ஆண்டுகளில் மண்பாண்டங்களை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 6 மாதங்களில் மண் சேகரித்து அதனை பக்குவப்படுத்தி பல வகையான மண்பாண்டங்கள் தயாரித்து சூளையில் வைத்து சுட்டு அதனை விற்பனைக்கு எடுத்து செல்வோம். சாதாரணமாக பானை விலை அளவுக்கேற்றவாறு ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்து வருகிறோம். தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே மண்பானைகள் விற்பனையாவதால் எங்களுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை என்றனர்.


Next Story