வாய்க்காலில் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம்
வாய்க்காலில் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம்
கொட்டையூரில் குறுகலான பாலத்தால் வாய்க்காலில் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை அகலப்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறுகலான பாலம்
வலங்கைமானை அடுத்த கொட்டையூரில் 1,200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கொட்டையூர் தெற்கு தெருவில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருவதற்கும், மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு செல்வதற்கும், பொதுமக்கள் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதற்கும் தெற்குதெருவில் உள்ள வாய்க்காலில் குறுகிய பாலம் உள்ளது.
வாய்க்காலில் விழும் அபாயம்
இந்த பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி வாய்க்காலில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் மின்விளக்கு இ்ல்லாததால் இரவு நேரங்களில் அந்த பாலம் வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும் கால்தவறி வாய்க்காலில் விழும் அபாயம் உள்ளது.
அகலப்படுத்த வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விபத்தை தடுக்கும் வகையில் கொட்டையூரில் குறுகலான பாலத்தை அகலப்படுத்தி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.