சோளிங்கரில் மலைக்கோவில் பாதையில் மண் சரிவு ஏற்படும் அபாயம்


சோளிங்கரில் மலைக்கோவில் பாதையில் மண் சரிவு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 23 July 2023 12:53 AM IST (Updated: 23 July 2023 3:15 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கரில் மலைக்கோவில் பாதையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

ராணிப்பேட்டை

சோளிங்கர்

சோளிங்கரில் மலைக்கோவில் பாதையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

சோளிங்கர் பகுதியில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான யோக நரசிம்ம சாமி கோவில் 750 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது. கோவிலுக்கு பக்தர்கள் 1,305 படிக்கட்டுகள் ஏறி சாமி தரிசனம் செய்கிறனர்.

கார்த்திகை மாதத்தில் நரசிம்மர் கண் திறந்து அருள்பாலிப்பார் என்பது ஐதிகம். அப்போது இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடக உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்த நிலையில் மலை கோவிலுக்கு செல்லும் ஆயிரமாவது படிக்கட்டில் மண் சரிவு ஏற்படும் நிலை உள்ளது. கோவில் நிர்வாகம் சார்பில் மண் மூட்டைகள் கொண்டு சற்று பாதுகாக்கப்பட்டுள்ளது.

எனினும் பருவமழை தொடங்கும் முன்பு மண்சரிவு ஏற்படும் நிலையில் உள்ள பகுதியை சீரமைப்பதை கோவில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


Next Story