வெண்ணாற்றின் குறுக்கே தடுப்பு சுவர் இடிந்ததால் தண்ணீரை தேக்க முடியாத அபாயம்


வெண்ணாற்றின் குறுக்கே தடுப்பு சுவர் இடிந்ததால் தண்ணீரை தேக்க முடியாத அபாயம்
x

வெண்ணாற்றின் குறுக்கே தடுப்பு சுவர் இடிந்ததால் தண்ணீரை தேக்க முடியாத அபாயம்

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

கூத்தாநல்லூர் அருகே வெண்ணாற்றின் குறுக்கே தடுப்பு சுவர் இடிந்ததால் தண்ணீரை தேக்க முடியாத அபாயம் ஏற்பட்டுள்ளது. புதிதாக தடுப்புசுவர் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெண்ணாற்றின் குறுக்கே தடுப்பு சுவர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள காடுவெட்டியில் நாகங்குடி பாசன வாய்க்காலையொட்டி அந்த பகுதி விவசாயிகள் பயன்பாட்டிற்காக வெண்ணாற்றின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

இதன் மூலம் தேங்கி நிற்கும் தண்ணீரை அந்த பகுதி விவசாயிகள், பாசன வாய்க்கால் வழியாக விவசாய நிலங்களுக்கு கொண்டு சென்று வயல்களில் தண்ணீரை தேக்கி ஒவ்வொரு ஆண்டும் நெல், உளுந்து, பயறு, பருத்தி போன்ற விவசாய சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

பம்பு செட் மூலம் தண்ணீர்

கடந்த 7 ஆண்டுகளாக காடுவெட்டியில் உள்ள தடுப்பு சுவர் இடிந்து சேதமடைந்து உள்ளது. இதனால் தடுப்பு சுவர் சேதமடைந்த பகுதியின் வழியாக, போதிய அளவு தண்ணீர் தேங்கி நிற்காமல் சென்று விடுகிறது. ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் கூட பாசன வாய்க்கால் வழியாக போதிய அளவு தண்ணீரை வயல்களுக்கு கொண்டு செல்லமுடியாமல் இருப்பதால் பம்பு செட் மூலம் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவல நிலை உள்ளதாக அந்த பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

புதிய தடுப்புசுவர் கட்டித்தரப்படுமா?

தற்போது குறுவை சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீரும் தடுப்பு சுவர் இடிந்த வழியாக தேங்கி நிற்காமல் செல்வதால் அந்தபகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தடுப்பு சுவரை அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story