கோவை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு


கோவை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர்

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தைகளை எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.

எனவே குழந்தை களை மீட்டு தரக் கோரி குமார் போலீஸ் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவ லகத்தில் பலமுறை புகார் அளித்து உள்ளார். ஆனால் எந்த நடவ டிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று மாலை வந்த குமார், தனது மனைவி மீது நடவடிக்கை எடுத்து, குழந்தைகளை மீட்டு தரக் கோரி தனது கையில் இருந்த மண் எண்ணெய்யை ஊற்றி திடீரென்று தீக்குளிக்க முயன்றார்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு குமாரை தடுத்து மண்எண்ணெய் கேனை பறித்தனர்.

பின்னர் அவர் மேல் தண்ணீரை ஊற்றி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

---

Image1 File Name : 14807791.jpg

----

Reporter : S.VIVEK_Staff Photographer Location : Coimbatore - Coimbatore


Next Story