வெளிநபர்கள் வருகைக்கு எதிர்ப்பும், ஆதரவும் போராட்டத்தால் பரபரப்பு


வெளிநபர்கள் வருகைக்கு எதிர்ப்பும், ஆதரவும் போராட்டத்தால் பரபரப்பு
x

வெளிநபர்கள் வருகைக்கு எதிர்ப்பும், ஆதரவும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் வேங்கைவயலில் ஒருவர் இறப்பு சம்பவத்தில் துக்கம் விசாரிப்பதற்காக ஒரு இயக்கத்தை சேர்ந்த முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் உள்பட நிர்வாகிகள் சிலர் சென்றிருக்கின்றனர். அப்போது அவர்களை ஒரு தரப்பினர் மறித்து தாக்க முற்பட்டதாகவும், இது தொடர்பாக அந்த இயக்கத்தினர் சார்பில் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் வேங்கைவயலுக்கு வெளிநபர்கள் வருவதை அனுமதிக்கக்கூடாது என ஒரு தரப்பினரும், வருபவர்களை தடுக்கக்கூடாது என மற்றொரு தரப்பினரும், போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் அனைவரும் கலைந்து சென்றனர். வேங்கைவயலுக்கு வெளியூரை சேர்ந்த நபர்கள் வருவதால் அடிக்கடி இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சுழற்சி முறையில் போலீசார் பணியில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க உயர்அதிகாரிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story