அமலாக்கத் துறை கதவை தட்ட தேவையில்லை.. திறந்தே வைத்துள்ளோம்- துரைமுருகன்


அமலாக்கத் துறை கதவை தட்ட தேவையில்லை.. திறந்தே வைத்துள்ளோம்- துரைமுருகன்
x

எங்கள் வீட்டு கதவை அமலாக்கத் துறை தட்ட தேவையில்லை. அதை நாங்கள் திறந்தே வைத்திருக்கிறோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

சென்னை,

எங்கள் வீட்டு கதவை அமலாக்கத் துறை தட்ட தேவையில்லை. அதை நாங்கள் திறந்தே வைத்திருக்கிறோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மார்க்ஸ்சிஸ்ட் கட்சி அதிக இடம் கேட்பதாக தகவல் வருவதாக கேட்கிறீர்கள். இது போன்ற வதந்திகளுக்கு எல்லாம் நான் பதில் அளிக்க மாட்டேன். அப்புறம் துரைமுருகன் சொன்னாரே என்று குட்டையை குழப்புவீர்கள். வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை கதவை தட்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சொல்கிறீர்கள்.

அமலாக்கத்துறை ஏன் தட்டுகிறார்கள். அந்த கஷ்டமே அவர்களுக்கு வேண்டாம். நாங்கள் கதவை எப்போதுமே திறந்தே வைத்திருக்கிறோம். அண்ணாமலை என்ன பெரிய பொருளாதார நிபுணரா? பெரிய, பெரிய ஆட்களே நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்" என்றார்.


Next Story