தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


தமிழகத்தில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை -  அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த சீதோஷ்ண நிலை காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். தனியார் மருத்துவமனைகள், சிறிய கிளினிக்குகளில் கூட கூட்டம் நிரம்பி வழிகிறது.

மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த மாத இறுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன. டிசம்பர் மாத இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் இதுவரை புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.


Next Story