ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று கோவையில் தமிழருவி மணியன் கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று கோவையில் தமிழருவி மணியன் கூறினார்.
ஊராட்சி உரிமைகள்
கோவை சிவானந்தாகாலனியில் காமராஜர் மக்கள் கட்சி சார்பில் ஊராட்சி உரிமைகள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் அந்த கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டு ஊராட்சியின் உரிமைகள் ஓர் ஆய்வு என்ற கையேட்டை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காமராஜர் மக்கள் கட்சி சார்பில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து கிராமசபை உரிமை என்ற கையேட் டை வழங்க இருக்கிறோம்.
கிராம ஊராட்சிகளுக்கு அனைத்து உரிமைகளும் வழங்கப்படவில்லை. குறிப்பாக சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் ஆகியவை வழங்கும் உரிமை கொடுக்கவில்லை.
கிராம மக்களின் அடிப்படை தேவையாக இது இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு கிராம ஊராட்சிகளுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும்.
எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணபலம்தான் வெல்லும். எனவே எங்கள் கட்சி சார்பில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை. அந்த தொகுதியை சேர்ந்த நல்ல வேட்பாளர் போட்டியிட்டால் பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் கவர்னர் இருந்தபோதே அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது மரபு அல்ல.
பொதுமக்களுக்கு நல்லது செய்ய கவர்னர், முதல்-அமைச்சர் இணைந்து செயல்பட வேண்டும். கவர்னரும் தமிழக பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, மக்கள் புண்படும்படியாக பேசாமல் வளர்ச்சியை குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டும்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா
ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திடாமல் வைத்திருப்பது தவறு. அதை அவர் உடனடி யாக செயல்படுத்த வேண்டும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
தமிழகத்தில் தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்றால் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆனால் அது சாத்தியம் அல்ல. அதுபோன்று பா.ஜனதாவை எதிர்க்க மற்ற எதிர்க்கட்சிகள் சேர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
---
Image1 File Name : 15151271.jpg
----
Reporter : J.JOSEPH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore