கிளை வாய்க்கால்களில் தண்ணீர் இல்லை
கல்லணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத நிலைஏற்பட்டு உள்ளது
திருக்காட்டுபள்ளி;
காவிரி பாசன பகுதிகளுக்கு கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு கல்லணை கால்வாய்களில் தண்ணீர் கடந்த 11ம் தேதியுடன்நிறுத்தப்பட்டது.மூன்று பிரதான ஆறுகளின் ஷட்டர்களும் மூடப்பட்ட நிலையில் மிகச் சிறிய அளவில் தண்ணீர் வெளிவந்து கொண்டுள்ளது.இதனால் கல்லணை காவிரி ஆறு சிறு வாய்க்கால் போலகாட்சி அளிக்கிறது.வழக்கம் போல விடுமுறை நாளான நேற்று கணிசமான அளவு மக்கள் கூட்டம் கல்லணையில்காணப்பட்டது.பிரதான.ஆறுகளில் தண்ணீர் திறந்து விட படாத நிலையில் பிள்ளை வாய்க்கால், ஆனந்த காவேரி வாய்க்காலில் முழுவதும் தண்ணீர் இல்லாமல் காணப்பட்டது.ஆனந்த காவேரி வாய்க்காலில் பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18ஆயிரத்து 533 கன அடியாக இருந்தது.அணையின் நீர்மட்டம் கடந்த நான்கு நாட்களில் 9 அடி உயர்ந்தது.இதனால் மேட்டூர் அணையில் நீர் மட்டம் 39.63 அடியாக உயர்ந்தது.கடந்த ஆண்டு இந்த நாளில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.அணைக்கு நீர் வரத்து 41543 கன அடியும், தண்ணீர் திறப்பு 40798 கன அடியாக இருந்தது.