'பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைப்பதில் எந்த தவறும் இல்லை'-ராமேசுவரத்தில் வைகோ பேட்டி


பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைப்பதில் எந்த தவறும் இல்லை-ராமேசுவரத்தில் வைகோ பேட்டி
x

காவியங்கள், கதைகளை தீட்டிய கருணாநிதிக்கு ‘பேனா நினைவுச்சின்னம் கடலில் அமைப்பதில் எந்த தவறும் இல்லை என்று ராமேசுவரத்தில் வைகோ கூறினார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் நேற்று ம.தி.மு.க இளைஞரணி துணை செயலாளர் கராத்தே பழனிச்சாமி இல்ல திருமண விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு எதிர்ப்பே கிடையாது. எரிச்சலும், ஆத்திரமும் உள்ளவர்கள் தான் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். நர்மதா நதியினிலே எப்படி பட்டேலுக்கு அவ்வளவு பெரிய சிலை வைத்தார்கள். அதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவித்தார்களா? பட்டேல் என்பவருக்கு சிலை வைக்கும் போது கருணாநிதிக்கு, கடலில் பேனா நினைவுச்சின்னத்தை அமைப்பதில் எந்த ஒரு தவறும் கிடையாது. காவியங்களையும், கதைகளையும், கவிதைகளையும் தீட்டிய அவருக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உடன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் கராத்தே பழனிசாமி, கழக துணை செயலாளர்கள் மல்லைசத்யா, ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் பேட்ரிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story