அக்னி குண்டத்தில் பெண் பக்தர் விழுவதுபோல் சென்றதால் பரபரப்பு


அக்னி குண்டத்தில் பெண் பக்தர் விழுவதுபோல் சென்றதால் பரபரப்பு
x

அக்னி குண்டத்தில் பெண் பக்தர் விழுவதுபோல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

திருச்சி ஏர்போர்ட் அங்காள ஈஸ்வரி, பீளிக்கான் முனீஸ்வரர் கோவில் திருவிழா, கடந்த 24-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக ஏராளமான பக்தர்கள் புனித நீராடி, கொட்டப்பட்டு கருப்பண்ணசாமி கோவிலில் இருந்து அலகு குத்தியும், காவடி மற்றும் தீச்சட்டி ஏந்தியும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 30 அடி நீள அலகினை குத்தியபடியும் பக்தர்கள் தீ மிதித்தனர்.

அப்போது அலகு குத்தியபடி பூக்குழி இறங்கிய பெண் பக்தர் ஒருவர், திடீரென்று மயக்கம் அடைந்து, அக்னி குண்டத்தில் விழுவது போல் சென்றார். அப்போது அவரை விழா கமிட்டியினர் பத்திரமாக மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story