ஓடும் லாரியில் இருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு
திகுப்பத்தூரில் ஓடும் லாரியில் இருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் இருந்து நேற்று இரவு காலி சமையல் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேலூர் நோக்கி சென்றது. திருப்பத்தூர் சக்திநகர் காய்கறி மார்க்கெட் அருகே சென்றபோது, திடீரென லாரியின் பின்பக்க டயர் கழன்று தனியாக ரோட்டில் ஓடியது. சாதுரியமாக செயல்பட்ட லாரி டிரைவர் உடனே லாரியை சாலை ஓரத்தில் நிறுத்தினார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர். பின்னர் லாரியில் இருந்து கழன்று ஓடிய டயரை மீண்டும் லாரியில் பொருத்தி அங்கிருந்து வேலூர் நோக்கி சென்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story