விழுப்புரம் அருகே இரு தரப்பினர் கத்தியால் வெட்டிக்கொண்டதால் பரபரப்பு


விழுப்புரம் அருகே    இரு தரப்பினர் கத்தியால் வெட்டிக்கொண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Oct 2023 12:15 AM IST (Updated: 3 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே இரு தரப்பினர் கத்தியால் வெட்டிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்


விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள பள்ளியந்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சங்கர் (வயது 46), மோகன்ராஜ் (27). இவர்கள் இரு தரப்புக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவின்போது தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்த முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தகாத வார்த்தையால் திட்டிக்கொண்டு உருட்டுக்கட்டையால் தாக்கினர். மேலும் இரு தரப்பினரும் கத்தியாலும் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த சங்கர், சுனில்குமார் (19), சுரேஷ் (36), பிரதீப்குமார் (18), குப்பன் (45) மற்றும் மோகன்ராஜ் (27), சன்னியாசி மனைவி சிவகாமி (47) ஆகியோர் காயமடைந்தனர். இதில் சிவகாமி, விழுப்புரம் அரசு மருத்துவமனையிலும், மற்ற 6 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தினால் பள்ளியந்தூர் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வருவதால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story