வாலிபர் மீது கரடி பாய வந்ததால் பரபரப்பு


வாலிபர் மீது கரடி பாய வந்ததால் பரபரப்பு
x

முக்கூடல் அருகே வாலிபர் மீது கரடி பாய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ள செங்குளம் - பனையன்குறிச்சி வனப்பகுதிக்குள் கபாலிபாறையை சேர்ந்த சுந்தர் (வயது 30) என்பவர் தனது ஆடுகளை பார்ப்பதற்காக சென்றார். அப்போது அங்கு வந்த கரடி திடீரென அவரை தாக்க பாய்ந்து வந்தது. உடனடியாக சுந்தர் கம்பி வேலியை தாண்டி குதித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story