அரசு டவுன் பஸ்சில் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு
நெல்லையில் அரசு டவுன் பஸ்சில் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் இருந்து நெல்லை நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். ராமையன்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பு அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்க சக்கரம் கழன்று சாலையில் ஓடியது.
அதை முதலிலேயே அறிந்த டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story