குப்பைத் தொட்டியில் ஆண் சிசு பிணமாக கிடந்ததால் பரபரப்பு


குப்பைத் தொட்டியில் ஆண் சிசு பிணமாக கிடந்ததால் பரபரப்பு
x

தண்டராம்பட்டு அருகே குப்பை தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு அருகே குப்பை தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண் குழந்தை பிணம்

தண்டராம்பட்டை அடுத்த செ.ஆண்டப்பட்டு ஊராட்சி வரவேற்பு எல்லை பலகை வைக்கப்பட்டுள்ள இடத்தில் ஊராட்சி சார்பில் குப்பை தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை காவலர்களைக் கொண்டு தினசரி ஊராட்சியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

நேற்று காலை சுகாதார ஊக்குனர் வெண்ணிலா, தூய்மை காவலர்கள் இந்திரா, வேணி, சக்தி, மகேஷ் ஆகியோர் குப்பை சேகரிக்கும் வண்டியை நிறுத்திவிட்டு குப்பை தொட்டியில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது குப்பைக்கு அடியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்ததை பார்த்து தூய்மை காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் குப்பனுக்கு அவர்கள் தெரிவிக்கவே அவர் அது குறித்து தானிப்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து விரைந்து வந்த தானிப்பாடி போலீசார் ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டனர். குழந்தை இறந்தே பிறந்ததால் குப்பை தொட்டியில் அதனை பெற்றவர் வீசினாரா? அல்லது கள்ளக்காதலில் பிறந்ததால் கொலை செய்து வீசினாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story