பெரியார் சிலை மீது சாமி சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு


பெரியார் சிலை மீது சாமி சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு
x

திருவாரூர் அருகே பெரியார் சிலை மீது சாமி சிலை வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருவாரூர்

திருவாரூரை அடுத்த சோழங்கநல்லூர் கடைவீதியில் பெரியாரின் முழு உருவ சிலை உள்ளது. இந்த சிலையின் மீது சிறிய அளவிலான சாமி சிலை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திராவிடர் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் பெரியாரை அவமதிக்கும் வகையில் அவரது சிலை மீது சாமி சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சாமி சிலையை அகற்றினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். பெரியார் சிலை மீது சாமி சிலை வைக்கப்பட்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





Next Story