மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு


மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு
x

நெல்லையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை சுற்றி கடந்த 4 நாட்களாக டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக பஸ்நிறுத்தங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நேற்று மாலையில் பயணிகள், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் என பலரும் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது வாலிபர் ஒருவர் மது போதையில் பஸ்நிலையத்தை சுற்றிச்செல்லும் பஸ்களை மறித்து ரகளையில் ஈடுபட்டு வந்தனார்.

இதனை அறிந்த போக்குவரத்து போலீசார் அந்த நபரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால் அதற்குள் அந்த போதை ஆசாமி போலீசாரின் காலடியில் சரிந்து விழுந்து ரோட்டில் படுத்துக்கொண்டார். போலீசார் அந்த நபரை எழுப்ப முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதற்கிடையே போதையில் விழுந்து கிடந்த நபர் ராமையன்பட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் ஆட்டோ ஒன்றை வரவழைத்து அதில் அந்த நபரை ஏற்றி விட்டனர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.


Next Story