கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு


கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு
x

கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த கார்குடல் கிராமத்தில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்றதலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் திவ்யா வரவு-செலவு கணக்குகளை வாசித்தார். கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்தபோது ஏரிக்கரை தெருவில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டோர் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளதாக நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால் நாங்கள் நீர்நிலை பாதிக்காத வகையில் வீடுகளை கட்டி வசித்து வருகிறோம். ஆகவே வீடுகளை அகற்றக்கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே ஊராட்சி மன்ற தலைவர், அவர்களை சமாதானப்படுத்தியதோடு, மேற்கண்ட கோரிக்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறினார். இதனை ஏற்ற பொதுமக்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story