போலீஸ் நிலையம் அருகே மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு


போலீஸ் நிலையம் அருகே மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு
x

போலீஸ் நிலையம் அருகே மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

போலீஸ் நிலையம் அருகே மறியலுக்கு முயன்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கண்ணமங்கலம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மேல்நகர் ஏரியில் மீன் பிடிப்பதற்கான ஏலம் எடுத்திருந்தார்.

கடந்த 1½ மாதத்திற்கு முன்பு மேல்நகர் காலனியில் வசிக்கும் சுதாகர், ஜெயக்குமார், அரவிந்த், செல்வக்குமார் ஆகியோர் அங்கு அத்துமீறி மீன் பிடித்துள்ளனர். அவர்களை பார்த்தீபன் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இது குறித்து பார்த்தீபன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் சுதாகரன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் மற்ற 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்நகர் காலனியில் வசிக்கும் பெண்கள் உள்ளிட்ட 30 பேர் கண்ணமங்கலம் போலீஸ் நிலையம் அருகே கூட்ரோடில் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சமரசம் செய்தனர். இதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story