தொடர் உண்ணாவிரதம் இருந்த பனை ஏறும் தொழிலாளர்கள் 71 பேர் கைது


தொடர் உண்ணாவிரதம் இருந்த பனை ஏறும் தொழிலாளர்கள் 71 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 7:24 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே தொடர் உண்ணாவிரதம் இருந்த பனை ஏறும் தொழிலாளர்கள் 71 பேர் கைது

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி அருகே வேம்பி மதுரா, பூரி குடிசை கிராமத்தில் உள்ள பனையேறும் தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும், பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டித்தும், பெண்களை இழிவாக பேசிய கஞ்சனூர் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்தும் கடந்த 27-ந்தேதி முதல் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் பாண்டியன் தலைமையில் பனையேறும் தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர்.

இவர்களிடம் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகள் 2 கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து உண்ணாவிரத போராட்டம் நீடித்தது. நேற்று 7-வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது பகல் 12.30 மணியளவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சேகர், சுபா ஆகியோர் தலைமையில் போலீசாா் அங்கு வந்தனர். பின்னர் பொது இடத்தில் தடையை மீறி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக கூறி உண்ணாவிரதம் இருந்த 25 பெண்கள் உள்பட 71 பேரை போலீசார் கைது செய்து கஞ்சனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

போராட்டம் தொடங்கி 7 நாளைக்கு பிறகு உண்ணாவிரதம் இருந்தவர்களை போலீசார் திடீரென கைது செய்த சம்பவம் பனையேறும் தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story