தாய்மொழியை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்


தாய்மொழியை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்
x

தமிழ் மொழியின் வரலாறை தெரிந்து கொண்டால்தான் தாய் மொழியை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

திருப்பத்தூர்

கருத்தரங்கம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழி பயிலரங்கம், கருத்தரங்கம் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

செம்மொழி செம்மாங்குமொழி என்று உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் பல தமிழறிஞர்கள் இருந்தாலும், கலைஞர் கருணாநிதி, ஜி.யு.போப் போன்றவர்கள் தமிழ் மொழியின் ஆழங்களை இந்த உலகிற்கு காட்டி இருக்கிறார்கள். சிந்து சமவெளி நாகரீக மக்கள் தமிழ் மக்கள்தான். அவர்கள்தான் அங்கிருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கின்றனர் என்று பல அறிஞர்கள் கூறிவருகிறார்கள். தமிழ் மொழியின் வரலாறு, நம்முடைய வரலாறையும் தெரிந்து கொண்டால்தான் நமது தாய்மொழியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

bபல நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலம் பேசினால் நம்மை உயர்வாக கருதுவார்கள் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள்கள். ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அதை எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். தமிழ் என்பது அப்படி இல்லை. அது உங்களது வாழ்க்கை, உணர்வு, அதை விட்டுவிடக்கூடாது. ஆபத்து காலத்தில் தாய்மொழி தமிழ்தான் முதலில் வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், கம்பன் கழக செயலாளர் ரத்தின நடராஜன், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் (பொறுப்பு) ப.ராஜேசுவரி, தமிழ் துறை தலைவர் பா.சிவராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story