மயிலாடுதுறை நகரில் 2 நாட்களுக்கு குடிநீர் வராது


மயிலாடுதுறை நகரில் 2 நாட்களுக்கு குடிநீர் வராது
x
தினத்தந்தி 19 Sept 2023 12:15 AM IST (Updated: 19 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை நகரில் நாளையும், நாளை மறுதினமும் குடிநீர் வராது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாது என நகராட்சி ஆணையர் ஏ.சங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை நகராட்சி குடிநீர் திட்டத்தின்கீழ் முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடியேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தலைமை குடிநீரேற்று நிலைய மின்மோட்டார் பம்பு பழுது, நீரேற்று குழாய் கசிவு ஏற்பட்டுள்ளதால் நாளையும் (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. எனவே நகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story