அரசூர், மேல்மலையனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்


அரசூர், மேல்மலையனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்
x

அரசூர், மேல்மலையனூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

விழுப்புரம்

அரசூர்,

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குடுமியான்குப்பம், சிறுகிராமம், சேமங்கலம், குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம், மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு, மேட்டத்தூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இதே போல் மேல்மலையனூர் அருகே தாயனூர் துணைமின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேல்மலையனூர், தாயனூர், தேவனூர், மானந்தல், வடபாலை, ஈயக்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவளாம்பாடி, நாரணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி அன்னமங்கலம், நீலாம்பூண்டி, சிந்திப்பட்டு, ஆத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண்பிள்ளைபெற்றாள், எய்யில், உண்ணா மனந்தல், எதப்பட்டு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவல்கள் விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்நாதன், செஞ்சி செயற்பொறியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story