துறையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
துறையூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
துறையூர்:
துறையூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
துறையூர் மின் கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி துறையூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாப்பட்டி, முத்தயம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, கரட்டாம்பட்டி, காளிப்பட்டி, பெருமாள்மலை அடிவாரம், கிழக்குவாடி, கீழக்குன்னுப்பட்டி, சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, எரகுடி, வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டி ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.