தேரியூர் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா:1,008 திருவிளக்கு பூஜை


தேரியூர் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா:1,008 திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேரியூர் முத்தாரம்மன் கோவில் கொடைவிழாவில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி தேரியூர் முத்தாரம்மன் கோவில் கொடைவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நாட்டில் நல்ல கனமழை பெய்ய வேண்டி தேரியூர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 10 மணிக்கு தேரியூர் சிறுவர், சிறுமிகளின் நடன, நிகழ்ச்சி, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அம்மன் வீதி உலா வருதல் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு உடன்குடி கண்டுகொண்ட விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் 12மணிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து அம்மன் வீதி உலா வந்து அருள் பாலித்தார். இரவு 9 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும், நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சப்பரத்தில் பவனி வருதல் நடந்தது. இன்று(புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து அம்மன் வீதி உலா வந்து மஞ்சள் நீராடுதல், மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பைரவர் பூஜை, இரவு 9மணிக்கு மதுரை முத்து மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்பு பட்டி மன்றம் நடக்கிறது. நாளை(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜையும், காலை 8 மணிக்கு பிரசாதம் வழங்குதல், காலை 9 மணிக்கு தேரியூர் பெண்கள் 125 பேர் கலந்து கொள்ளும் மெகா கோலப்போட்டியும், இரவு 8மணிக்கு தேரியூர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நெல்லை சந்திரனின் திரைப்பட கச்சேரியும் நடக்கிறது.


Next Story