தமிழக அரசின் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்


தமிழக அரசின் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 19 Nov 2022 12:24 AM IST (Updated: 19 Nov 2022 12:35 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

தமிழக அரசின் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக மகளிர் தினவிழாவின் போது பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதல்-அமைச்சரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ.1 லட்சத்திற்கான காசோலை, சான்று மற்றும் சால்வை வழங்கப்படும்.

இவ்விருதினைப்பெற https://awards.tn.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 2023-ம் ஆண்டு அவ்வையார் விருது பெறுவதற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலம் சார்ந்த நடவடிக்கைகள் இருக்க வேண்டும். பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கையும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையான முறையில் மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி இருக்க வேண்டும். டிசம்பர் 10-ந் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களையும் கையொப்பத்துடன் மாவட்ட சமூகநல அலுவலகம் என்ற முகவரியில் உரிய தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

1 More update

Next Story