வேலை கிடைக்கிறது என்று தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் - ப.சிதம்பரம்
பெரியார், காமராஜர் அண்ணா உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கும் எதிரான கட்சி பாஜக முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களை கட்டி உள்ளது. இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இந்தநிலையில், ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்தபோது முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:-
பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாத நிலையில் பிழைக்க வழியில்லாமல் வேலை கிடைக்கிறது என்று தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் தமிழ்நாட்டில் இருந்து எவரும் வேலையில்லாமல் அங்கே செல்வதில்லை. பெரியார், காமராஜர் அண்ணா உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கும் எதிரான கட்சி பாஜக என்றார்.