மயான வசதி கேட்டு துறையூர் தாசில்தார் அலுவலகம் முற்றுகை


மயான வசதி கேட்டு துறையூர் தாசில்தார் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 1 July 2023 12:56 AM IST (Updated: 1 July 2023 5:51 PM IST)
t-max-icont-min-icon

மயான வசதி கேட்டு துறையூர் தாசில்தார் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருச்சி

துறையூரை அடுத்த மதுராபுரி ஊராட்சி நரிக்குறவர் காலனியில் 400-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு மயான வசதி, சுகாதார வளாகம், குடிநீர் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இது தொடர்பாக பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே இனிமேலாது நடவடிக்கை எடுக்க கோரி முசிறி பிரிவு ரோட்டில் உள்ள நரிக்குறவர் காலனியில் இருந்து ஊர்வலமாக வந்து பொதுமக்கள் துறையூர் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தாசில்தார் வனஜா போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story