தியாகதுருகம் பேரூராட்சி மன்ற கூட்டம்
தியாகதுருகத்தில் பேரூராட்சி மன்ற கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி
தியாகதுருகம்,
தியாகதுருகம் பேரூராட்சி மன்ற கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் சீனிவாசன் வரவேற்றார். கூட்டத்தில் பஸ் நிலையம் எதிரில் உள்ள சமுதாயக்கூட கட்டிடத்தை பொதுமக்கள் வசதிக்காக ரூ.17 லட்சம் மதிப்பில் விரிவாக்கம் செய்வது, ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறை மற்றும் பாப்பான்குளம் சுகாதாரவளாகத்தை சீரமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story